Column Left

Vettri

Breaking News

யாழில் பென்ஸ் காரில் ஹெரோயின் - வாள் உள்ளிட்ட ஆயுதங்கள்: சிக்கிய இருவர்




 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பென்ஸ் காரை வழிமறித்து காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது காரினுள் ஹெரோயின் போதைப்பொருள், வாள் மற்றும் நக்கிள்ஸ் கிளிப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது

இதையடுத்து காரில் பயணித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



பின்பு, கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

.அதன்போது, கைதானவர்களில் ஒருவர் கடந்த வருடம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர் என தெரியவந்துள்ளது.


இந்தநிலையில், குறித்த நபர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே பிணையில் வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Subscribe Us