Column Left

Vettri

Breaking News

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலத்தில் செல்லும் நோயாளிகள் கடும் அவதி வைத்தியசாலை வளவிலும் அணுகுபாதைகளிலும் நீர் தேங்குவதால் முதியவர்கள், நோயாளர்கள் கடும் அசௌகரியம்




 அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலத்தில் செல்லும் நோயாளிகள் கடும் அவதி  

வைத்தியசாலை வளவிலும் அணுகுபாதைகளிலும் நீர் தேங்குவதால் முதியவர்கள், நோயாளர்கள் கடும் அசௌகரியம்


  பாறுக் ஷிஹான்


அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.


தற்போது பிராந்தியத்தில் மாரிகால மழை ஆரம்பித்துள்ள நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை வளவினுள்ளும், வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான அணுகுபாதைகளிலும் மழைநீர் வடிந்தோட வழியின்றி அதிகளவில் தேங்கி நிற்கின்றது.


 முறையான வடிகான் அமைப்பு இன்மையாலும், நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டுள்ளமையாலும் தேங்கி நிற்கும் வெள்ளநீர் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் மற்றும் தீவிர நோயாளிகள் நடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளதுடன், வைத்தியசாலைச் சூழலில் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.


 நீண்டகாலமாகத் தொடரும் இப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் அப்பகுதி மக்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வைத்தியசாலை வளவில் தேங்கும் மழைநீரை அகற்றி, சீரான வடிகான் அமைப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தீவிரமாகக் கோரிக்கை 

விடுக்கின்றனர்.

No comments

Subscribe Us