Column Left

Vettri

Breaking News

விவேகானந்த பூங்காவில் முதியோர்களுக்கு உலருணவு வழங்கல்




 விவேகானந்த பூங்காவில் முதியோர்களுக்கு உலருணவு வழங்கல் 

( வி.ரி.சகாதேவராஜா)

இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன், சமூக நலன்புரி அமைப்பினால் (SWO), முதியோர் தினத்தை முன்னிட்டு, மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 40 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(30) கிரான்குளம் விவேகானந்த பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.


இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.


நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தஜி மகராஜ் , பிரதம அதிதியாக மண்முனைப் பற்று உதவிப்பிரதேச செயலாளர் இராகி.இளம்குமுதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


மேலும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது தெரிவு செய்யப்பட்ட 40 முதியோர் பயனாளிகளுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


முதியோர்களின் நலனையும், அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந் நிகழ்விற்கான நிதி அனுசரணையை வழங்கிய இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆன்மீக மற்றும் பிரதம அதிதிகளுக்கும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.சற்குணேஸ்வரன் நன்றிகளைத் தெரிவித்தார்.

No comments

Subscribe Us