Column Left

Vettri

Breaking News

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகொன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியது




 சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகொன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியது


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


இலங்கை கடற்படையினால்,தேவேந்திரமுனைக்கு தெற்கே அமைந்துள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கொடியற்ற வெளிநாட்டுப் படகொன்றுடன் ஏழு (07) வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். குறித்த வெளிநாட்டுப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக வெள்ளிக்கிழமை (2026 நவம்பர் 27) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் படகில் காணப்பட்ட போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று (03) பொதிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் சுமார் மூன்று (03) கிலோகிராம் 670 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.


கைது செய்யப்பட்ட ஏழு (07) வெளிநாட்டுச் சந்தேகநபர்கள், வெளிநாட்டுப் படகு (01) மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன







No comments

Subscribe Us