கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு திறன் பலகை கையளிக்கும் நிகழ்வு
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு திறன் பலகை கையளிக்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஐக்கிய இராச்சியத்தின் ரத்னம் பவுண்டேஷன் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கை கல்வி ஆலோசகர் முத்து இராதாகிருஷ்ணன் மற்றும் அமைப்பின் புத்தளம் மாவட்ட இணைப்பாளரும் நாயக்கர்சேனை பாடசாலையின் அதிபருமான வீ.ராமநாதன் ஆகியோரிடம் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் தொடராக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு திறன் பலகை வழங்கப்பட்டுள்ளது
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட திறன் வகுப்பறைக்கு திறன் பலகை ஒன்று அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மற்றும் ரத்னா பவுண்டேஷன் இணைந்து வெள்ளிக்கிழமை (06) பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் தலைமையில் இடம்பெற்ற திறன் பலகை கையளிக்கும் நிகழ்வில் ஐ.எம்.எச்.ஓ அமைப்பின் இலங்கை கல்வி ஆலோசகர் முத்து இராதாகிருஷ்ணன் மற்றும் அமைப்பின் புத்தளம் மாவட்ட இணைப்பாளரும் நாயக்கர்சேனை பாடசாலையின் அதிபருமான வீ.ராமநாதன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம் பவுஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஐக்கிய இராச்சியத்தின் ரத்னா பவுண்டேஷன் மற்றும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஆகியன இணைந்து இதுவரை கற்பிட்டி கோட்ட மட்டத்தில் 06 வதாகவும் புத்தளம் மாவட்டத்தில் 17 வதாகவும் வடமேல் மாகாணத்தில் 33 வதாகவும் திறன் பலகை வழங்கும் பாடசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments