சம்மாந்துறையின் அனைத்து வட்டாரங்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நசார் வலியுறுத்தல்
சம்மாந்துறையின் அனைத்து வட்டாரங்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நசார் வலியுறுத்தல்
தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அனைத்து வட்டாரங்களிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நசார் வலியுறுத்தியுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்விளக்குகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, வட்டார வேறுபாடுகளைக் கருத்திற்கொள்ளாமல் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான மின்விளக்குகளைப் பொருத்துவதற்கும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் சபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாடுகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் சபையின் நிர்வாகச் செயற்பாடுகளையும் மக்கள் சேவையையும் பாதிக்க இடமளிக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட்டு, கட்சி அரசியலுக்கு அப்பால் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Reviewed by Thakzani
on
11/12/2026 02:42:00 PM
Rating: 5

No comments