Column Left

Vettri

Breaking News

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வருடாந்த செயல் திட்ட முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல்




 

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வருடாந்த செயல் திட்ட முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல் 


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய 2026/2027 வருடாந்த செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி அக்க்ஷரா வரவேற்பு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது 



நிறுவனத்தின் ஆய்வறிக்கை மேற்பார்வையாளர்நிபுனி மற்றும் 

நிஷான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இச் செயலமர்வில் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில் ஆறு வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரச்சனைகள் இணங்காணப்பட்டு அவைகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்றது 


மேலும் 2026 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையான முன்மொழிவு திட்டமாக இது அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us