Home
/
Unlabelled
/
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்! 13 உறுப்பினர்கள் ஆதரவு; 6 பேர் எதிர்ப்பு; 2 பேர் நடுநிலை
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்! 13 உறுப்பினர்கள் ஆதரவு; 6 பேர் எதிர்ப்பு; 2 பேர் நடுநிலை
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்!
13 உறுப்பினர்கள் ஆதரவு; 6 பேர் எதிர்ப்பு; 2 பேர் நடுநிலை
தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு இன்று (10) பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் 13 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததுடன், 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதனையடுத்து, 13 வாக்குகள் ஆதரவுடன் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, பெண்கள், விசேட தேவையுடையோர், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 2.3 மில்லியன் ரூபாவும், அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்துவதற்காக 0.75 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சேவைகள், தாய்சேய் பராமரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் போசாக்குணவு வழங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக 0.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்! 13 உறுப்பினர்கள் ஆதரவு; 6 பேர் எதிர்ப்பு; 2 பேர் நடுநிலை
Reviewed by Thakzani
on
11/10/2026 07:20:00 PM
Rating: 5
Reviewed by Thakzani
on
11/10/2026 07:20:00 PM
Rating: 5

No comments