பண்டாரடுவ விமலராம விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி கோலாகல திறப்பு
பண்டாரடுவ விமலராம விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி கோலாகல திறப்பு
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், உஹன பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டாரடுவ விமலராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி என்பன நேற்று (31) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டன.
பண்டாரடுவ விமலராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலகம்புர பன்னரத்ன தேரர் அவர்களின் தலைமையில், விகாரையின் கொடையாளர் சபையினால் (தாயக சபாவ) இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தங்க வேலியைத் திறந்து வைத்த நிகழ்வின் போது மத வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலி மற்றும் போதி மதில் என்பன விசேட அதிதிகளால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கநாயக்கர்,அம்பாறை மஹாவாபி விகாரையின் விகாராதிபதி,அரந்தாலவ ஜனநாயக பௌத்த மையத்தின் விகாராதிபதி,அம்பாறை வித்யானந்த மகா பிரிவெனவின் இயக்குனர்,இலங்கை இராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் திலுபா பண்டார
உள்ளிட்ட சமயத் தலைவர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்க வேலியைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பௌத்த அடியார்களுடன் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
--

No comments