Column Left

Vettri

Breaking News

நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை தொர்பில் வெளியான அறிவிப்பு




 நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை தொர்பில் வெளியான அறிவிப்பு




லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் அந் நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.


மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 815 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments

Subscribe Us