வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள புயல்! அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருகோணமலையிலிருந்து சுமார் 630 கி.மீ. வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று(16.11.2026) மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர், நவம்பர் 17ஆம் திகதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, இன்று நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலின்போது அவதானமாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளத.
இந்த தொகுதியானது இலங்கையை விட்டு மேலும் விலகிச்செல்லும் எனவும், இன்று (நவம்பர் 16) மாலை தெற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் 'புயலாக' (Cyclonic Storm) வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் 'கடும் புயலாக' (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று (16) முதல் நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில், வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
நேற்று (15) இரவு 11.30 மணியளவில், இந்த தொகுதி திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

No comments