2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க கலண்டர் வெளியீடப்பட்டது...
2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க கலண்டர் வெளியீடப்பட்டது...
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஸ்ரீ பட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த பஞ்சாங்க கலண்டர் வெளியீட்டு நிகழ்வு இன்று (10) ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. ஜெயரஞ்சன், ஆலயக் குரு, ஆலயத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க கலண்டர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதி ஆலயக் குருவுக்கும், இரண்டாவது பிரதி திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் அவர்களுக்கும் , மூன்றாவது பிரதி திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆலயத்தின் வருடாந்த ஆன்மிக மற்றும் சமயப் பணிகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இப்பஞ்சாங்க கலண்டர் வெளியீடு, ஆலய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க கலண்டரின் விற்பனையும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments