Column Left

Vettri

Breaking News

இன்று *13.11.2026* வெள்ளிக்கிழமை *தேசிய டெங்கு ஒழிப்பு* *வேலைத்திட்டம்*




 இன்று *13.11.2026* வெள்ளிக்கிழமை *தேசிய டெங்கு ஒழிப்பு* *வேலைத்திட்டம்* 


களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, வடக்கு, மற்றும் பட்டிருப்பு பிரதேசங்களில் இடம்பெற்றது இதில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,

கடற்படையினர் இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் டெங்கு கள உதவியாளர்கள் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டு வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், அரச திணைக்களங்கள்,

தனியார் நிறுவனங்கள்,

சமயஸ்தலங்கள் என்பவற்றில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது *467* இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு நுளம்பு குடம்பிகள் மற்றும் நுளம்பு பெருகும் சூழலை வைத்திருந்த *08* பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.



No comments

Subscribe Us