பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகப் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த சட்டவரைவுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறித்த சட்டவரைவு மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதிக்கக்கூடும் என எதிர்ப்புத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கம் உடனடியாக இந்தச் சட்டவரைவை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments