Column Left

Vettri

Breaking News

தோடந்துவ மீன்பிடித் துறைமுகத்தில் கடற்படையின் பங்களிப்புடன் முதலுதவி தொடர்பாக மீனவ சமூகத்தினரை வலுவூட்டும் பயிற்சித் திட்டம் !!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும், முதலுதவி தொடர்பாக மீனவ சமூகத்தினரை வலுவூட்டும் பயிற்சித் திட்டத் தொடரின் மற்றுமொரு பயிற்சி, தெற்கு கடற்படை கட்டளையின் மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்புடன் 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதி காலி, தோடந்துவ மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. அதற்கமைய, அடிப்படை உயிர் ஆதரவு (Basic Life Support), மனநல நல்வாழ்வு, கடலில் மீனவ சமூகத்தினருக்கு ஏற்படக்கூடிய விபத்துகளின் போது கரையை அடையும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை நோயாளிகளுக்கு முதலுதவி வழங்குதல் மற்றும் அவ்வாறான அவசர நிலைமைகளை நிர்வகித்தல் தொடர்பில், மீனவ சமூகத்தினருக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் இம்முதலுதவிப் பயிற்சிப் பட்டறையின்போது வழங்கப்பட்டன.

No comments

Subscribe Us