1,042 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் அம்பலாந்தோட்டையில் கைது!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து அம்பலாந்தோட்டை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (2026 ஒக்டோபர் 16) கைது செய்யப்பட்டார்.
தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான காவந்திஸ்ஸ நிறுவனத்தினர், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாருடன் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த 1,042 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 22 வயதுடைய அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments