Column Left

Vettri

Breaking News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் - ஊடக ஒளிப்பதிவாளர் கைது!!




முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியே வந்தபோதே, அங்கிருந்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவரால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரைத் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில், சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகக் குறித்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Subscribe Us