Column Left

Vettri

Breaking News

அரசாங்கத்தின் புதிய மருந்து விலைக் கட்டுப்பாடு கொள்கை: மக்களுக்கு 5.7 பில்லியன் ரூபா மிச்சமாகும் எனத் தெரிவிப்பு!!




முக்கிய 13 விலை கூடிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மதிப்பிட்டுள்ள சேமிப்பு ரூ. 5.7 பில்லியன் ஆகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எந்தெந்த மருந்துகளைக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான சேமிப்பு மாறுபடும் எனவும் அவர் மேலும் கூறினார். விலை குறைக்கப்பட்ட மருந்துகள் முக்கியமாக நோயாளிகளுக்கு நீண்டகால பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மருந்துகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Subscribe Us