வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!!!
வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அவரது மரணம் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று(01) மாலை குறித்த இளைஞர் மைதானத்தில் நின்றநிலையில் மழை பெய்துள்ளது.
இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார்.
இதன்போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது.
20 வயதான ஜோசப் அன்ரணி என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.
No comments