மூதூரில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் உறுப்பினர்களுக்கு – ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கி வைப்பு..!
(சேனையூர் நிருபர்)
சமுர்த்தி சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் 2025/2026 ஆம் ஆண்டிற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05.10.2026) மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கே.எம். சப்றான் அவர்களும் , கணக்காளர் எம்.எச.எம். றினோஸ் அவர்களும், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எம். றிபான் அவர்களும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments