Column Left

Vettri

Breaking News

மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!!!




மாதம்பிட்டி, கொட்டாஞ்சேனைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடமிருந்து 520 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார். இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us