Column Left

Vettri

Breaking News

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு இராணுவத் தளபதி உள்ளிட்ட பல உயர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்பு!!!!




(பாறுக் ஷிஹான்) இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட 'கிராத்' (திருக்குர்ஆன் ஓதுதல்) மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இதன்போது, மௌலவி முகமது லத்பான் சயீத், ஷேக் ஏ.பி. ரிஸ்வான் மற்றும் ஷேக் மசூக் சஜீர் ஆகிய மார்க்க அறிஞர்களால் இராணுவத்தினருக்கும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போர் வீரர்களுக்கும் ஆசி வழங்கி விசேட 'கிராத்' ஓதப்பட்டு, துஆப் பிரார்த்தனைகளும் நிகழ்த்தப்பட்டன. இவ்விசேட மத வழிபாட்டு நிகழ்வில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரநிலைகளைச் சேர்ந்த படைவீரர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Subscribe Us