Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை இரண்டு நாட்களின் உயிரிழப்பு!




 

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை இரண்டு நாட்களின் உயிரிழப்பு!

தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக அம்பாறை மாவட்ட  கால்நடை மருத்துவக் குழுவினர்  வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான சிகிச்சைகளை  முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பட்டுள்ள இந்த யானையைக் காப்பாற்றுவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிய நிலையில் அது உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இறந்த யானையின் உடக்கூற்று பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது



No comments

Subscribe Us