மட்டக்களப்பின் புலமைத்துவ ஊற்றுக் கண்கள்! நாளை இரண்டாவது அமர்வு
மட்டக்களப்பின் புலமைத்துவ ஊற்றுக் கண்கள்!
நாளை இரண்டாவது அமர்வு
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க புலமைத்துவ குழுவின் "மட்டக்களப்பின் புலமைத்துவ ஊற்றுக் கண்கள் ", பேசப்படாத பக்கங்கள் தொடர் - 2 நிகழ்வானது மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நாளை(25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தலைவரின் காரியாலய அவைக்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் “பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம்” (1926- 1987) அவர்களைப்பற்றி மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் காப்பாளர் பேராசிரியர் சி .சந்திரசேகரம் சிறப்புரை நிகழ்த்துவார்.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா நன்றியுரையாற்றுவார்

No comments