பேஸ்புக் பயனர்களின் தரவு பாதுகாப்பு விவகாரம்: மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம்!
பேஸ்புக் பயனர்களின் தரவு பாதுகாப்பு விவகாரம்: மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம்!
பேஸ்புக் பயனர்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதன் தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) $25 பில்லியன் (சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர்) அபராதம் செலுத்த வேண்டும் என நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக மெட்டா நிறுவனத்தை நியூ மெக்சிகோ நடுவர் மன்றம் (Jury) குற்றவாளியாக அறிவித்தது.
பயனர்களின் தனிநபர் தரவுகளை யார் அணுக முடியும் என்பது குறித்தும், வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பது குறித்தும் ஃபேஸ்புக் நிறுவனம் தவறான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனம் 43 மில்லியனுக்கும் (4.3 கோடிக்கும்) அதிகமான விதிமீறல்களில் ஈடுபட்டதாக நடுவர் மன்றம் பதிவு செய்து2018-ஆம் ஆண்டில் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ (Cambridge Analytica) சர்ச்சையின் தொடர்ச்சியாகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது
அரசியல் விளம்பரங்களுக்காக சுமார் 87 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தனிநபர் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் சட்டவிரோதமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments