காரைதீவில் வாகன விபத்து! மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!
காரைதீவில் வாகன விபத்து! மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட வாகன விபத்தில் மூவர் சிறுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (28) புதன்கிழமை மாலை காரைதீவு நிந்தவூர் வெட்டுவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments