Column Left

Vettri

Breaking News

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!!!!




பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது. 2022ஆம் ஆண்டு 'தேவா தேவாதான்' இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இதை சிலாகித்துப் பேசியிருப்பார். கானா பாடல்களை திரையுலகில் மைய நீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேல் அவர் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us