🥋 தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு கராத்தே வீரர்களின் அசத்தல் சாதனை! தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று பிரதேசத்திற்கு பெருமை சேர்ப்பு!!
ஆலையடிவேம்பு, ஒக்டோபர் 04:
ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்...
விளையாட்டு அமைச்சினால் கொழும்பு களனிப் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்ட 50ஆவது தேசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ‘ராம் கராத்தே-டோ’ (Ram Karate-Do) சங்க மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆலையடிவேம்பு வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
🥇 தங்கப் பதக்கம்
S. நவக்ஷன் – குமித்தே (Kumite) 84 கிலோகிராம் எடைப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
🥉 வெண்கலப் பதக்கம் – குழு கட்டா (Team Kata)
P. Sharon Sachin
S. Navakshan
P. Mathanraj
தேசிய விளையாட்டு அரங்கில் பதக்கங்களை வென்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ வீரர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்சியாளர்கள் மற்றும் ராம் கராத்தே-டோ சங்கத்தினருக்கும் பிரதேச மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments