Column Left

Vettri

Breaking News

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!!!!




கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக, வாடகை வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் கணேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரிலேயே இந்த வீடு சோதனையிடப்பட்டது. மின்னுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கிரிந்திவெல பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது டுபாயில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் கிரிந்திவெல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us