Column Left

Vettri

Breaking News

இன்று சிறப்பாக நடைபெற்ற சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம்




(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று (1) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து கொடுத்து ஒரு வருட பூர்த்தியையொட்டி இச் சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஸ்ண பிரியதர்ஷன் குருக்களின் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் அடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பாற்குபவனி மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுந்தரேஸ்வரர் கோவில் வரை நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தின் சார்பாக திருமதி ரஞ்சன் அகந்தினி மற்றும் மகன் திருஷாந் உள்ளிட்டவர்கள் உபயகாரர்களாவர்.

No comments

Subscribe Us