Column Left

Vettri

Breaking News

நள்ளிரவில் தம்பட்டையில் இன்னிசை விருந்து!!!!




( வி.ரி.சகாதேவராஜா) தம்பட்டை ஆறுமுக சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேகத்தையொட்டி, ஏற்பாடு செய்த கல்முனை "சாகரம்" இசைக் குழுவினரின் "இன்னிசை விருந்து" கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை தம்பட்டை கடற்கரையில் கோலாகலமாக இடம் பெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இரவு நள்ளிரவு 12 மணி வரை குழுமியிருந்து அறிவிப்பாளர் காரைதீவு ரிஷியின் அறிவிப்பில் இந்த நிகழ்வை ஆடிப் பாடி ரசித்து மகிழ்ந்தனர். நிகழ்வில் மூத்த பாடகர் சேகர் தொடக்கம் பல திறமையான பாடகர்கள் இனிமையாக பாடி அசத்தினர். இந்த இசை நிகழ்வில், பாடல்கள் பலவற்றை பாடிய இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சி புகழ் இலங்கை திருமலை இளம் பாடகி வர்ஜாவிற்கு கடந்த (18) நள்ளிரவில் பகிரங்க கௌரவம் அளிக்கப்பட்டது. கல்முனை"சாகரம்" இசைக் குழுவின் தலைவர் நெல்சன் ஜோன், மூத்த பாடகர் பி .கே .சேகர் , பாடகர் வி. மோகன் ஆகியோருடன் காரைதீவின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் பிரபல ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் முன்னிலையில் இம் மகத்தான கௌரவம் ரசிகர்களின் கரவோசை மத்தியில் அளிக்கப்பட்டது .

No comments

Subscribe Us