Column Left

Vettri

Breaking News

தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு கிண்ணியா விநாயகர் மகா வித்தியாலய அணி தெரிவு.!!!




(சேனையூர் நிருபர்) கிண்ணியா ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட கடின பந்து கிரிக்கெட் அணி, முதல் தடவையாக தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ளும் குறித்த அணிக்குத் தேவையான சகல அனுசரணைகளையும் அரி ஓம் சிவ சக்தி லட்சுமி நாராயண நற்பணி மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 27.09.2026 விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி ரீ. கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் தேசிய மட்டப் போட்டிக்கான தெரிவை பாராட்டிய அதிபர், அணிக்கு முழுமையான அனுசரணைகளை வழங்க முன்வந்த நற்பணி மன்றத்துக்கும், அதன் தலைவர் எம். ஆர். பி. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், மன்றத்தின் தொடர்ச்சியான சமூகப் பணிகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் எனவும் அவர் பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்வில் அரி ஓம் சிவ சக்தி லட்சுமி நாராயண நற்பணி மன்றத்தின் மதகுரு கோபாலசிங்கம் றுகிந்தன் சர்மா, மன்றத்தின் செயலாளர் யோ. நிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது மதகுரு கோபாலசிங்கம் றுகிந்தன் சர்மா சிறப்புரையாற்றியதுடன், தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

No comments

Subscribe Us