Column Left

Vettri

Breaking News

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரிக்கு முதலாம் இடம்!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கற்பிட்டி பிரதேச கிளையின் ஏற்பாட்டில் கற்பிட்டி தொடக்கம் நுரைச்சோலை வரையான மதுரஸாக்களுக்கிடையில் இடம்பெற்ற கல்வி சார் போட்டிகளில் நான்கு முதல். இடங்களுடன் ஒரு இரண்டாம் ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மதுரஸாக்களின் கல்வி சார் போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ளது அதன்படி தமிழ் இஸ்லாமிய கீதம் போட்டியின் கனிஷ்ட பிரிவில் எம்.ஏ உமர் முதலாம் இடத்தையும் சிரேஷ்ட பிரிவில் எம்.யூ எம் ஆசிம் முதலாம் இடத்தையும் ஹதீஸ் மனனம் கனிஷ்ட பிரிவில் எம்.ஆர்.எம் றையான் முதலாம் இடத்தையும் சிரேஷ்ட பிரிவில் ஏ.எஸ் மனான் மூன்றாம் இடத்தையும் அரபு எழுத்தணி கனிஷ்ட பிரிவில் எஸ். ஏ பவுஸூல் ஹசன் முதலாம் இடத்தையும் சிரேஷ்ட பிரிவில் எம்.எஸ்.எம் சர்பான் இரண்டாம் இடத்தையும் பெற்று மதுரஸாவிற்கும் கற்பிட்டிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப் மாணவர்களின் வெற்றிக்கு முன்னின்று உழைத்த உஸ்தாத்மார்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் எம் ஏ பீ எம் முபாசில் (உஸ்மானி) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us