Column Left

Vettri

Breaking News

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 02 சந்தேகநபர்கள் கைது!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் சனிக்கிழமை (2026 செப்டம்பர் 12) மேற்கொண்ட சிறப்புக் தேடுதலின் மூலம், சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த இருவரை (02) ஒரு படகு (01) மற்றும் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கடல் அட்டைகளுடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கமைய, வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கஞ்சதேவ நிறுவனத்தால், யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை அல்லைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்புக் தேடுதலின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதிக்கப்பட்டது. அங்கு, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு தரையிறக்கிக் கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைத் தொகுதியுடன் அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் (02) இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 41 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள், கடல் அட்டைத் தொகுதி மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன

No comments

Subscribe Us