Column Left

Vettri

Breaking News

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!!!




(செல்வி வினாயகமூர்த்தி ஜதுர்ஷன் ) ​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், மாணவர்களின் வீதி நாடக நிகழ்வுகளும் இன்று (08)செவ்வாய்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன. ​இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு நாளானது “மக்கள், பூமி மற்றும் செழிப்பிற்கான எழுத்தறிவு” (Literacy for People, Planet and Prosperity) எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ​இவ்வூர்வலத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திரு. ஏ. நசீர் மற்றும் திரு. எஸ்.சுரனுதன்,முன்பள்ளி பாடசாலைகளுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. எஸ். விவேகானந்தராஜா, வணிகக்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். ​பேரணியின் போது மாணவர்கள் கல்வி மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றதுடன் மாணவர்களினால் கல்வியின் அவசியத்தை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. ​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி வலய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Subscribe Us