Column Left

Vettri

Breaking News

20 குடும்பங்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு: ஒளிர்ந்தது உடங்கா தோட்டத்து வீதி




(தில்சாத் பர்வீஸ்) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட உடங்கா 01 மற்றும் உடங்கா 02 பகுதிகளில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தேவையான இடங்களில் புதிய தெருமின்விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகானின் கோரிக்கைக்கு அமைவாகவும், பிரதேச சபை தவிசாளரின் அனுமதியுடனும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பௌஸ்மாவத்தை பிரதான வீதியிலிருந்து பிரிந்து செல்லும் இரண்டாவது குறுக்கு வீதியான தோட்டத்து வீதியில் புதிய தெருமின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், நீண்டகாலமாக தெருமின்விளக்கு வசதியின்றி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீதியில் தெருமின்விளக்கு பொருத்துவதற்குத் தேவையான Bundled Cable பொருத்தப்பட்டு, புதிய தெருமின்விளக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் உடங்கா 01 மற்றும் உடங்கா 02 பகுதிகளில் பொதுமக்களின் தேவையை கருத்திற்கொண்டு பல்வேறு இடங்களில் புதிய தெருமின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உடங்கா பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் இடம்பெறும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வீதிகளில் வெளிச்ச வசதியை ஏற்படுத்துவது இரவு நேர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை மின்சார சபையின் சம்மாந்துறை கிளை மின் அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதேவேளை, உடங்கா பிரதேசத்தின் மேலும் சில பகுதிகளில் தெருமின்விளக்கு வசதிகள் தொடர்பான தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us