Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறப்பு விழா!!!




(மஜீட். ARM) ​கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி கட்டிடத்தின் திறப்பு விழாவும், அதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று (12) பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெற்றது. ​நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில், இதற்கமைய நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான புதிய விடுதி வசதியுடன் கூடிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ​கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ டொக்டர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இணைந்து இக்கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களிடம் கையளித்தனர். ​இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் அப்துல் மஜித் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், சம்மாந்துறை ஜனாசா அமைப்பு மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு ​கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.எம். நஃபீல் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

No comments

Subscribe Us