சம்மாந்துறை ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நகல் பிரதி வழங்கி வைப்பு!!
(மஜீட். ARM)
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாஸித் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, சம்மாந்துறை ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ரூபா 250,000/- பெறுமதியான நகல் பிரதி ஒன்று வழங்கி வைக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் எம்.முஸம்மில் அவர்களின் தலைமையில் 10.08.2026 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம்.ஜனோபர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் அதிதிகள் வரிசையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்ஷத் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்களான எஸ். நளீம், சித்தி நிலோபா, சி. நௌஷா, எம். றிபானா, சம்மாந்துறை மத்திய குழுச் செயலாளர் அசாருடீன் சலீம், சம்மாந்துறை மத்திய குழு உறுப்பினர்களான ஏ. எல். நிப்றாஸ், ஆர். றிபாஸ் கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments