Column Left

Vettri

Breaking News

தேசிய மக்கள் அரசாங்கத்திடம் சாதி, இனம், மத பேதம் இல்லை நாங்கள் மக்களுக்கு சேவை செய்யவே வந்தவர்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.!!




ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை விடுதி திறப்பு விழா வைத்தியசாலை பொறுப்பதிகாரி தலைமையில் நடை பெற்றது இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு, சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர் எம்.ஏ.நபீர், பிரதி ஆணையாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர், ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சாதி, இனம், மத பேதம் இல்லை நாங்கள் மக்களுக்கு சேவை செய்யவே வந்தவர்கள் தேர்தல் காலத்திலேயே. கட்சி வேற்றுமை காணப்பட்டாலும் தேர்தலின் பின்னர் நாங்கள் அனைவரும் சாதி, இன,மத, கட்சி பேதமின்றி இணைந்து ஒற்றுமையாக மக்களுக்கு வேலை செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் கிழக்கு மாகாணத்திலே ஆங்கில வைத்தியத்திற்கும் சித்த ஆயுர்வேத வைத்தியத்திற்கும் ஒரே மாதிரியாக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறோம் அதன்படையில் 2024 ஆம் ஆண்டு 109 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் இம்முறை 257 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கி இருக்கின்றோம். மற்றும் இன்னொரு முடிவினையும் நாங்கள் கிழக்கு மாகாணத்திலே எடுத்து இருக்கின்றோம் முன்னைய காலத்தில் ஒரு கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் எடுத்தது ஆனால் நாங்கள் ஒரு முடிவெடுத்திருக்கின்றோம் ஒரு கட்டடமானது ஒரு வருடங்களுக்குள்ளே நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அதற்குள் பல சிக்கல்கள் இருந்தாலும் அதனை நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த வருடத்தில் நான்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இருக்கின்றோம். இதைத்தவிர இந்தியன் நிதி உதவியூடாக ஆயுர்வேதிக் கிராமம் ஒன்றை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். அனைத்து வகையான சுற்றுலாத்துறை அபிவிருத்தி பற்றி பேசுகின்றோம். ஆனால் ஆயுர்வேதிக் சார்ந்த சுற்றுலாத் துறையினது அபிவிருத்தி பற்றி பேசப்படுவதில்லை இதனை நாங்கள் சுற்றுலாத்துறை அமைச்சருடன் கதைச் இருக்கின்றோம். கிழக்கு மாகாணத்திலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆயுர்வேத சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வோம். மன்முனை தென்னருவில் பற்று பிரதேச சபையிலே 600 மில்லியன் ரூபாய் பணம் இருக்கின்றது என தவிசாளர் தெரிவித்தார். அதனை வைத்து அவர் மக்களுக்கு எவ்வளவோ சேவைகளை செய்யலாம். விசேடமாக கிழக்கு மாகாணத்திலே தேசிய சக்தி அரசாங்கமானது அனைவருடனும் இணைந்து ஒற்றுமையான வேலைத் திட்டங்களை ஒற்றுமையாக இலங்கையர் என்ற உணர்வோடு முன்னெடுத்து வருகிறது இதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.....பழுகாமம் நிருபர்

No comments

Subscribe Us