சம்மாந்துறையில் சமுர்த்தி 'ரண்விமன' திட்டத்தின் கீழ் புதிய வீடு உத்தியோபூர்வமாக வழங்கி வைப்பு!
(மஜீட். ARM)
சம்மாந்துறை பிரதேசத்தில் சமுர்த்தி 'ரண்விமன' வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (13.08.2026) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சென்னல் கிராமம் - 01 இல், பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 'ரண்விமன' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்றைய தினம் வைபவ ரீதியாக உத்தியோபூர்வமாக உரிய பயனாளிகளிடம் அதிகாரப்பூர்வமாகக் வழங்கி வைக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிக்குரிய வீட்டைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரஜா சக்தி தவிசாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளுக்குச் சொந்தக் கூரையை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் 'ரண்விமன' மற்றும் பிரஜாசக்தி திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments