சம்மாந்துறை இஸ்மாயில் வித்தியாலயத்திற்கு மடிக் கணனி வழங்கி வைப்பு!!
(மஜீட். ARM & சர்ஜுன் லாபீர்)
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கமு/இஸ்மாயில் வித்தியாலயத்தின் அவசியத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் மடிக் கணனி ஒன்று நேற்று (13) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த மடிக் கணனியினை வழங்கி வைத்தார்.
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட், பிரதேச சபை உறுப்பினரும் 'கிளின் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான வை.பி.எம். நவாஸ், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்ட பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments