Column Left

Vettri

Breaking News

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரால் மோசடி செய்யப்பட்ட பணத் தொகையானது 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளைக் கட்டித் தருவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து, அதை நம்பித் தொடர்பு கொண்டவர்களிடமே இவர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார். இவர் செய்த இந்த மோசடிகள் தொடர்பில் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!!




வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரால் மோசடி செய்யப்பட்ட பணத் தொகையானது 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளைக் கட்டித் தருவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து, அதை நம்பித் தொடர்பு கொண்டவர்களிடமே இவர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார். இவர் செய்த இந்த மோசடிகள் தொடர்பில் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us