மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும்
(எம்.எஸ் எம்.ஸாகிர்)
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலையில் இடம்பெற்றது.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில், மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP), சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான றஸ்மி எம். மூஸா, ஏ.எல்.எம். தௌபீக், கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம். இஸ்மாயில், ஓய்வுபெற்ற கோட்ட கல்வி அதிகாரி எம்.ஐ.எம். ஜப்பார், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ. மஜீத், அரசியல் ஆய்வாளர், பாடகர் முனைமருதவன் எம்.எச்.எம். இப்றாஹீம், உலமா கட்சியின் தலைவர் கலாபூஷணம் முபாரக் அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி மசூரா ஸுஹுர்தீன், அதன் செயலாளர் டாக்டர் பர்வீன் மற்றும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் பிரதித் தலைவர் என்.எம். அலிக்கான், செயலாளர் ஹாஜியானி சித்தி ஜெஸீனா உட்பட மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மருதூர் கலை, கலாசார மன்றத்தின் தலைவர் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் மற்றும் களிகம்பு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம். ஸாகிர் தலைமையிலான பொல்லடி குழுவினரால் பொல்லடி அடித்து, அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
மருதக் கலைஞர்களின் கவிதைகள், பாடல்கள், பொல்லடி நிகழ்வுகள் என நிகழ்வை மெருகூட்டியதோடு, மர்ஹும் கலைச்சுடர் சக்காப் மௌலானா பற்றி வருகை தந்த அதிதிகள் பலரும் அவரது குண நலன்கள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகள் பற்றி சிலாகித்துப் பேசினர்.
கலைத்துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காகவும் அவர்களது அயராத சேவையைப் பாராட்டியும் கலைஞர்கள் மற்றும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்களும் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அதிதிகளால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வை அறிவிப்பாளர்களான அலீம், எம்.பி.எம். றின்ஸான் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
No comments