Column Left

Vettri

Breaking News

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 10,000 புதிய ரயில் தண்டவாளங்கள்!




மத்திய கிழக்கில் நிலவிய இராணுவச் சூழ்நிலை காரணமாக சில காலம் தாமதமான 10,000 புதிய ரயில் தண்டவாளங்கள், நேற்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இதில் சுமார் 5,000 தண்டவாளங்கள் கரையோர ரயில் பாதையில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் புனரமைக்க பயன்படுத்தப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலான சுமார் 50 இடங்களில் ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இந்தப் பணிகள் சுமார் 6 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் ரூ. 2,000 மில்லியன் உள்ளூர் நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது. அத்துடன், ரயில் பாலங்களின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், கரையோர ரயில் பாதையில் தினசரி ஏற்படும் ரயில் தாமதங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Subscribe Us