ஒவ்வொரு ஊழியரும் தனது கடமையை பொறுப்பாக ஏற்க வேண்டும்!! டாக்டர் ஜீ. சுகுணன் வலியுறுத்தல்!!
*(ஜலீல் ஜீ - வடக்கு வைத்தியசாலை வளாகத்திலிருந்து)*
வைத்தியசாலையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தமது கடமையை தனிப்பட்ட பொறுப்பாக ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
இன்று (24) பணிக்கு திரும்பிய அவர், கூட்ட மண்டபத்தில் வைத்தியசாலை அதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார்.
பணியாளர் பணிமாற்றம் மற்றும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு பிரச்சினையும் நோயாளிகளுக்கான சேவையை பாதிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் வெற்றி தனிப்பட்ட ஒருவரின் செயற்பாட்டில் அல்லாமல் ஒட்டுமொத்த குழுவினரின் ஒத்துழைப்பில் தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments