Column Left

Vettri

Breaking News

வெற்றியின் கரங்கள் அமைப்பினால்கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி கௌரவிப்பு!!




இறைவனின் அருளைத் தேடி, யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations Private Limited-இன் 'வெற்றியின் கரங்கள்' அமைப்பு, ஒரு மாபெரும் சேவையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நேற்று, திங்கட்கிழமை, ஜூன் 29, 2026 அன்று, மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின் முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள 130-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. 'வெற்றியின் கரங்கள்' அமைப்பு, இதுபோன்ற சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றதுடன், எதிர்காலத்திலும் இப்படியான மக்கள் நலப் பணிகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

No comments