Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!




பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்து கருத்துக்களை முன்வைத்தார். மேலும், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது டன், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

No comments

Subscribe Us