Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் விசேட யோகா நிகழ்வு!!




செல்வி வினாயகமூர்த்தி)

சர்வதேச அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற தொனிப்பொருளில் இந்துகலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்தும்  “சர்வதேச யோகா தின நிகழ்வு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு நாளை  (21)ஆம் திகதி காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், பொதுமக்கள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள்,  விளையாட்டு வீரர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் என அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யோகா பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், யோகாவின் வரலாறு, அதன் பயன்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வும் இந்நிகழ்வின் ஊடாக வழங்கப்படவுள்ளதுடன் 

“ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க யோகாவை வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவோம்” என்ற செய்தியுடன் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments

Subscribe Us