Column Left

Vettri

Breaking News

கல்முனை பிரதேச 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!!




ஏ. எஸ். எம். அர்ஹம் (நிருபர்) கல்முனை பிரதேச 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (29) சந்தாங்கேணி மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனத் தலைவர் என். எம். அப்ரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, இளைஞர் சேவை அதிகாரி ஏ. எல். எம். அஸீம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். சம்மேளன உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அதிதிகளாக W. A. கங்கா சாகரிக்கா – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர், ஏ. முபாரக் அலி – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர், எம். ஒய். எம். சாதிக் – கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயப் பிரதி அதிபர், அல்-ஹாஜ் நஃப்ரீஸ் முகமட் – (Asja Travels and Tours) மற்றும் யு. எல். றியால் – விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விளையாட்டு விழாவில் இடம்பெற்ற இளைஞர்களின் தடகள (சுவட்டு) நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறுதிநாள் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவுற்றன.

No comments