ஞாயிறன்று மட்டக்களப்பில் "அம்மாவை வணங்குவோம்" அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி
ஞாயிறன்று மட்டக்களப்பில் "அம்மாவை வணங்குவோம்" அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி
( வி.ரி.சகாதேவராஜா)
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு துளசி மண்டபம், மட்டக்களப்பு கல்லடியில் நடைபெறவுள்ளது.
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments